ஈரோடு, ஜூன் 26 –
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கடந்த மூன்று நாட்களாக நடந்தது. இந்த சுதர்சன வேள்வி அனைவரும் சுபிட்சமாக வாழவும், மழை பொழிந்து மக்கள் சந்தோஷமாக வாழவும், வழக்குகளில் வெற்றி பெறவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும், நோய் விலகவும், எதிரிகளின் சூழ்ச்சி சதித்திட்டம் போன்றவைகளில் இருந்து காக்கவும் வறுமை நீங்கவும் பயன்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதில் அமைச்சர் விஜய் பாலாஜியின் மனைவியும் த மா கா மண்டல ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான தன்யா, பிரபல ஜோதிடர் ஓம்.உலக நாதன், அரி பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேந்தர், அறங்காவலர் குழு தலைவர் கர்சிப் சுப்பிரமணியம், அறங்காவலர்கள் சுந்தரராஜ், ராணி, ஹரிஹரன், ராவணன் மற்றும் பட்டாச்சாரியர்கள் செய்து இருந்தனர்.



