ஈரோடு, ஆக. 7 –
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக இரண்டு நாட்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கல்லூரியின் தாளாளர் பி.டி. தங்கவேல், முதல்வர் முனைவர் ஹெச். வாசுதேவன் ஆகியோர் வழிகாட்டுதலில் நடைபெற்றது. துறைத்தலைவர் முனைவர் பயிற்சிப் பட்டறையைத் துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் எல் பி எஸ் சியின் ஏ ஐ டேட்டா என்ஜினீயர் மொஹமெட் டேனிஷ் கலந்துகொண்டு ப்ராம்டிங் தொழில் நுட்பத்தை பற்றித் தெளிவான வழிகாட்டுதல் வழங்குதல், வடிவமைப்பைக் குறிப்பிடுதல் மதிப்பீட்டு அளவுகோல்களை செயல்படுத்தல், பணிகளைப் பிரித்தல் போன்றவை குறித்து விளக்கியும் பயிற்சியும் கொடுத்தார். இறுதியில் மாணவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதவிப்பேராசிரியர் சி. உமா செய்திருந்தார்.