குலசேகரம் மே 7
குமரி மாவட்டம் குலசேகரம் பொன்மனை புள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் 46 இவர் அப்பகுதியில் கான்கிரீட் பணிக்கு ஆள் அனுப்பி வைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு மரிய புஷ்பம் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது, இரண்டாவது மகள் கல்லூரியில் பயின்று வருகிறார்.
வேலை விஷயமாக ஒரு நபரை சந்திக்க குலசேகரம் பகுதிக்கு வந்த ரமேஷ் இரவு சுமார் 8 மணி அளவில் குலசேகரத்தில் இருந்து தனது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வெண்டலியோடு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது நீட் தேர்வு எழுதிவிட்டு இரு பெண்களாக இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பெண் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் இவருடைய இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் படு காயங்களுடன் அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்
சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.