இராமநாதபுரம், அக் : 13
இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற ஊராட்சிகள் உதவி இயக்குநர்கள் (கிழக்கு) சீனிவாசன், (மேற்கு) ராமராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமமூர்த்தி ஆகியோரைத் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செந்தாமரை முன்னிலையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்டப் பொருளாளர் சிவசாமி, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



