இராமநாதபுரம், செப். 11 –
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று (11.09.2025) சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 68-வது நினைவு தினத்தையொட்டி, அன்னாரின் நினைவிடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி A.K.S. விஜயன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உள்ளனர்.



