நாகர்கோவில், ஜூலை 28 –
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை துவங்கி உள்ளனர். நமது மாநிலத்தில் புதுமைப் பெண்/ தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான PM கிசான் கணக்குகள், 100 நாள் வேலை கணக்குகள், கர்ப்பிணிகளுக்கான PMMVY கணக்குகள், முதியோர் உதவி தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம் /உதவி தொகை பெறும் கணக்குகளும் அடங்கும். இதில் ஆரம்ப காலத்தில் துவங்கப்பட்ட கணிசமான கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரர் இறப்பிற்குப் பிறகு கணக்கில் உள்ள தொகையை மிக எளிய முறையில் மிக விரைவாக வாரிசுதாரர்கள் பெற முடியும்.
இதன்படி எங்களின் அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்யப்பட தேவையான வசதி மாநிலம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் Play Store-ல் உள்ள IPPB மொபைல் செயலி மூலம் அவரவரே வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
மேலும் IPPB செயலி மற்றும் தபால்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதார் சீடிங் செய்து அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாக பெறலாம். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய IPPB வங்கி கணக்குடன் உங்கள் அஞ்சலக சேமிப்பு (POSB) கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும் IPPB செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு (SSA, PPF, RD, PLI/RPLI) திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
மேலும் பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் Rs.555/Rs.755 பீரிமியத்தில் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் UPI ஸ்டிக்கர் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அஞ்சலகங்களில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுமாறு குமரி மாவட்ட அஞ்சல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.