போகலூர், ஜுலை 26 –
ராமநாதபுரத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 1.6.2009 பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முதல்வர் கரம்பிடித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அடையாளம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஒற்றைக் கோரிக்கை விரைந்து நிறைவேற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் வினோத் பாபு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தினேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் தினேஷ் குமார், கோபி நாகு ராமநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.