பூதப்பாண்டி, ஜுலை 26 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள சாட்டு புதூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர் நேற்று இறந்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்களும் ஊர் மக்களும் சேர்ந்து வழக்கம் போல் அடக்கம் செய்யும் கல்லறைதோட்டத்திற்க்கு அவரது பூத உடலை கொண்டு சென்றனர். சீதப்பாலில் இருந்து தெள்ளாந்தி செல்லும் சாலையில் அந்த இடுகாடு அரசியர் கால்வாயை அடுத்து அமைந்துள்ளது. அந்த கால்வாயை கடந்து செல்ல பாலங்கள் இல்லாமல் அப்பகுதி மக்கள் கால்வாயின் உள்ளே இறங்கி மறுபடியும் அந்த புறமுள்ள மேட்டு பகுதிக்கு சென்று தான் கல்லறை தோட்டத்தை அடைய முடியும். மழை காலங்களில் அந்த கால்வாயை கடந்து செல்ல மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தார். அதன் பலனாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டி தரலாம் எனவும் பொதுப்பணித் துறையினரிடமிருந்து அனுமதி கிடைத்த உடன் கட்டி தரப்படும் எனவும் கூறி வருகிறார்கள். மக்களின் அவசரதேவைகளுக்கு கூட ஒவ்வொரு துறையாக சென்று தான் பெற வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளதாக அங்கு கூடியிருந்த மக்கள் வேதனை தெரிவித்தனர்.