கோவை, மே 23 –
தமிழ்நாடு அரசு மீன் வளர்ச்சி கழகம், ஆழியாறு சார்பில் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 8 மணி முதல் 10 வரை விற்பனை நடைபெற்று வருகிறது.
இது பற்றிய விற்பனையாளர் கூறியதாவது: ஆழியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் இயற்கையாக வளர்க்கப்பட்ட மீன்கள் இங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜிலேபி, கட்லா, ரோகு, மிருகால் போன்ற மீன் வகைகள் இங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வரும் காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப அதிகமாக மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனக் கூறினார்.



