மார்த்தாண்டம், ஜூலை 25 –
அருமனை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (33) ஆட்டோ டிரைவர். இவர் மனைவி வினிஷா (29). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் பிரபு தனது வீட்டின் மாடி படியில் இருந்து கீழ இறங்கி வந்த போது திடீரென மயக்கம் ஏற்பட்டு தவறி விழுந்ததாக தெரிகிறது.
இதில் பலத்த காயம் அடைந்தவரை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோத டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.