வேலூர், ஜூலை 11 –
வேலூர் மாவட்டம் அரியூர் கார்த்திக் நகர் அருள்மிகு ஷீரடி ஸ்ரீ அஷ்ய பாபா ஆலயத்தில் 13-ம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழாவில் காக்கட ஆர்த்தி, பால் அபிஷேகம், சாவடி ஊர்வலம், பரதநாட்டியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும், இரவு ஆரத்தி நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் குரு பூர்ணிமா பெருவிழாவினை முன்னிட்டு பஞ்சலோகத்தினாலான ஷீரடி ஸ்ரீ அக்ஷ்யபாபா சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஆலய விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஷீரடி ஸ்ரீ அஷ்ய பாபாவிற்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.