தஞ்சாவூர், செப்.9
அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அறிவியலுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கை கருத்துக்களையும், மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய நபரைக் கண்டித்தும், அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதை கண்டித்தும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவற்றின் சார்பில், சனிக்கிழமை தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தார். இதில், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சந்துரு, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, சிபிஎம் மாநகரச் செயலாளர் வடிவேலன், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ் செல்வி நிறைவுறையாற்றினார். இதில் அனைத்து அரங்கங்களின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்