திருப்பூர், ஜூலை 30 –
மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் தலைமையில் நடைபெற்றதில் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனுவில்: அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட் டம் உயர்ந்து விவசாயம் புத்துயிர் பெற்று வருகிறது. எனினும், இத்திட்டத் தின் பயன்கள் முழுமையாக கிடைக்க விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும்
தற்போது முக்கிய குளங்களுக்கு நீர் சென்றாலும், ஏராளமான சிறிய, நடுத்தர அளவிலான குளங்கள் மற்றும் குட்டைகள் இத்திட்டத்தில் விடுபட்டுள்ளன. இவற்றையும் இணைத் தால், மழைக்கால உபரி நீரை முழுமை யாகச் சேமித்து, கூடுதல் கிராமங்கள் பயன்பெற வழியேற்படும்.
திருப்பூர் மாவட்டம் வடக்கிலுள்ள பெருமாநல்லூர் பகுதியிலுள்ள ஈட்டிவீரம்பாளையம் கிராமத்திலுள்ள, முட்டியங்கிணறு குட்டைக்கு கடந்த ஆண்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. சொக்கனுார் கிராமம், பட்டம்பாளையம் ஊராட்சியிலுள்ள குட்டைகளுக்கு மிக குறைந்தளவில் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டிலாவது நுாறு சதவீத தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை வெறும் நீர் நிரப்பும் திட்டமாக மட்டுமின்றி, நிலத்தடி நீர் மட்டம் உயரவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டமாக மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், நிர்வாகி பாலகுமார், கேஏகே.கிருஷ்ணசாமி, வஞ்சிபாளையம் துரை, விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



