காங்கேயம் ரோடு, ஜூலை 22 –
திருப்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் ஒன்பது மாவட்டங்களை அடக்கிய கொங்கு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் அபூபக்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்குகளை ஒருமுகப்படுத்தும் வகையில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் அனைத்து முகல்லா ஜமாத் பிரச்சாரம் செய்யப் போவதாகவும்
மத நல்லிணக்கத்திற்கு எதிராக தமிழக மக்கள் எப்பொழுதும் ஆதரித்தது கிடையாது என்றும் பாஜக அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எண்ணங்களை கெடுக்கும் வகையில் தவறான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர் என்றும் மதவாத பாஜக அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மைதீன்க்கு தமிழக அரசின் சார்பில் தகைசால் தமிழர் விருது வழங்கிய தமிழக அரசுக்கு அனைத்து ஜமாத் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொகுதிகளை கேட்டு பெறப்படும் என்றும் பெயர் தாங்கிய கட்சிகளை பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு அணிகள் தான் என்றும் ஒன்று மதசார்பற்ற கூட்டணி மற்றொன்று மதவாத கூட்டணி என்றும் பாஜக அரசு மதசார்பற்ற அரசு என்றால் தற்பொழுது வரை மத்தியில் பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு எந்த விதமான பதவிகளும் கொடுக்கப்படவில்லை என்றும் அதேபோல இஸ்லாமியர்களை ஒடுக்கும் விதத்தில் தான் அனைத்து விதமான திட்டங்களையும் தீட்டி வருவதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.