By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அடிப்படை வசதி இன்றி தவிக்கும் உதிரம்பட்டி – வடகரை மக்கள்: நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி மரியா ஜெனிபர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அடிப்படை வசதி இன்றி தவிக்கும் உதிரம்பட்டி – வடகரை மக்கள்: நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி மரியா ஜெனிபர் கோரிக்கை
கனஂனியாகுமரி

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் உதிரம்பட்டி – வடகரை மக்கள்: நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி மரியா ஜெனிபர் கோரிக்கை

Last updated: June 28, 2025 7:23 pm
June 28, 2025
41 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 28 –

கன்னியாகுமரி தொகுதி, தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட உதிரம்பட்டி – வடகரை பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தவறியதால் இப்பகுதி மக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இவர்களின் துயர் நிலை அறிந்த நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிட்டத்தட்ட 80 குடும்பங்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த கிராம மக்கள் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் இருந்து வருகிறது. சாலைகள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் கால்வாய்கள் என அனைத்தும் சேதமடைந்து பராமரிப்பற்று கிடக்கிறது.

ஒட்டுமொத்த கிராமமும் அடிப்படை சுகாதார வசதிகள் எதுவுமில்லாமல் சரியான கழிவு மேலாண்மை இல்லாமல் இருக்கிறது. அந்த ஊர் வழியாக செல்லும் பழையாறானது குப்பை குவியல்களாக காட்சியளிக்கிறது. சரியான சாலை வசதிகள் இல்லாததால் இவ்வூர் மக்கள் பேருந்து நிலையத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை இருக்கிறது.

கடந்த ஆட்சி காலத்தில் ஆஸ்டின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கட்டப்பட்ட நூலகம் ஒன்று இன்னும் திறந்து கூட வைக்கப்படாமல் வெற்று கட்டிடமாக பயனற்று கிடக்கிறது.

ஆதித்தமிழ்குடி மக்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் இதுபோன்று கண்டுகொள்ளப்படாமல் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் பின்தங்கிய நிலையிலேயே வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு முழுவதும் வழக்கமாக பார்க்கும் காட்சியாக இருக்கிறது.

வாக்கு வங்கிகளாக மட்டுமே இம்மக்களை கருதி வெறும் ஓட்டரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருப்பது தான் ஆண்ட மற்றும் ஆளும் திராவிட கட்சிகளின் யுக்தியாக இருக்கிறது.

இத்தகைய கிராமங்களை பார்க்கும்போது உள்ளாட்சித் துறை என்பது மக்களுக்கானதா என்ற சந்தேகம் தான் எழுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் என்பது அந்த மக்களிடமிருந்தே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்களை அதிகாரமற்றவர்களாகவும் மக்களுக்காக செயல்படாத நிலையில் கண்காணிகளாக வைத்திருக்கும் நவீன அடிமை முறையோ என்ற எண்ணம் எழுகிறது.

உள்ளாட்சி தேர்தல்களும், அதன் நிர்வாக செயல்பாடுகளும், நம் மக்கள் தங்கள் சொந்த விரல்களாலே தங்கள் கண்களை குத்திக் கொள்ள செய்யும் திராவிட சூழ்ச்சியாகவே இருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் இதற்கான தீர்வை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என கிராம மக்களிடம் உறுதியளித்திருக்கிறோம்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான கோரிக்கை மனுவை கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த பிரச்சினையை தொடர்ந்து கண்காணித்து தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இக்கிராம மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெறும் வரை அவர்களோடு துணை நிற்போம் என உறுதியளித்துக் கொள்கிறேன்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து தீர்ப்பு
அஞ்சுகிராமம் அருகே நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி
கன்னியாகுமரியில் கேரள முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
குழித்துறை நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகேபெண் மீது தாக்குதல்; பொறியாளர் மீது வழக்கு

February 3, 2025
62 Views
தருமபுரி கிராமங்கள் பாசன வசதி பெறும்
போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account