கன்னியாகுமரி, அக். 27 –
குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலையத்திற்கு சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர் காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு அரசு ஆணை வெளியிடப்பட்டது.
அதன்படி அஞ்சுகிராமத்திற்கு முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதல் முறையாக இன்ஸ்பெக்டராக செல்வகுமார் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.



