தென்காசி, ஜூன் 20 –
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, ஜெய் பாக்யா சட்டநாதன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், வட்டாரத் தலைவர் பெருமாள், கதிரவன்,
TKபாண்டியன், முப்புடாதி பெரியசாமி, பூமாதேவி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.