வேலூர், ஜூலை 30 –
வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் ரூ.87 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணா, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இங்கு மரக்கன்றினையும் அமைச்சர் விஜய் பாலாஜி நட்டார்.
இதே போன்று சேண்பாக்கம் புகழ் பெற்ற செல்வ விநாயகர் ஆலயத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான ஆலய அன்னதான கூடத்திற்கும் அமைச்சர் விஜய் பாலாஜி பூமி பூஜை செய்தார். இதில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் சேண்பாக்கம் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதே போன்று வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.33 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மறுவாழ்வு சேவை மையத்தினையும் அமைச்சர் துவங்கி வைத்தார்.



