விளாத்திகுளம், 22.08.2026.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் ரமேஷின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் முதலாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை தனது மகன் மீது கொண்ட பாசத்தினாலும், மாட்டுவண்டி பந்தயத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவும் இசக்கிமுத்து நடத்தினார்.
பூஞ்சிட்டு, தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற மாபெரும் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் திருநெல்வேலி, மதுரை,ராமநாதபுரம்,தேனி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 56 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
பூஞ்சிட்டு பந்தயத்திற்கு போகவர 5 மைல் தூரமும்,தேன்சிட்டு பந்தயத்திற்கு போகவர 4 மைல் தூரமும் போட்டியானது நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நடைபெற்ற இந்தமாபெரும் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயத்தினை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



