சென்னை: அக்.21.
மழைநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தையும், எதிர்கால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் மழைநீர் சேகரிப்பின் பங்கையும் எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மழைநீர் தொடர்பான ‘துளி’ என்ற இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட்டார். தொடர்ந்து, மழைநீரைச் சேமிக்கும் முறைகள் குறித்த மாதிரிகளைப் பார்வையிட்டார். மழைநீரை வீணாக்காமல் சேமிப்பதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



