By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலார் பேர் நிறுவனம் தேசிய அளவில் 200-வது கிளை துவக்கம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > போலார் பேர் நிறுவனம் தேசிய அளவில் 200-வது கிளை துவக்கம்.
சென்னைதமிழ்நாடு

போலார் பேர் நிறுவனம் தேசிய அளவில் 200-வது கிளை துவக்கம்.

Last updated: August 12, 2026 5:29 pm
August 12, 2026
1 View
Share
SHARE

‘பெங்களூருவில் ‘தி ஐஸ்கிரீம் சண்டே ஜோன்’ என்றழைக்கப்படும் பிரபல ‘போலார் பேர்’ நிறுவனம், தேசிய அளவில் தனது 200-வது கிளையைத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த நிறுவனம்பெங்களூருவில் மட்டும் 100-வது கிளையையும் தொடங்கி சாதனை படைத்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூரு தனது முதல் கிளையைத் தொடங்கியது. இன்று 35-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200 கடைகளுடன் விரிவடைந்து, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு இனிப்பக (டெசர்ட்) நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது.தொழில்முனைவோர் கிஷோர் ராய் என்பவரால் தொடங்கப்பட்ட “போலார் பேர் ” நிறுவனம், தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி தனது கிளைகளை படிப்படியாக உயர்த்தியது. ஆரம்பம் முதலே வெளிநாட்டு முதலீடுகள் இன்றி, சுய நிதி மூலம் மட்டுமே செயல்பட்டு வந்துள்ள இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நெட்வொர்க்கையும் பெற்று வருகிறது.


இதுகுறித்து போலார் பேர் நிறுவனத்தின் நிறுவனர் கிஷோர் ராய் கூறியதாவது: “ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மறக்க முடியாத ஐஸ்கிரீம் சுவையை வழங்க வேண்டும் என்ற எளிய லட்சியத்துடன் தான் 2008-இல் போலார் பேர் தொடங்கப்பட்டது. அந்த காலத்தில் வெறும் ஐஸ்கிரீம் கப்புகளை மட்டுமே விற்று வந்தனர். ஆனால், ‘சண்டே’ வகை ஐஸ்கிரீம்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அதன்படியே தரமான பால் பொருட்கள் மற்றும் சிறப்பு ரெசிபிகளைக் கொண்டு சுவையான சண்டேக்களை உருவாக்கினோம். இன்று எங்கள் கடைகள் அனைத்தும் மக்கள் இணைந்து கொண்டாடும் இடமாக மாறியுள்ளன. பெங்களூரில் மட்டுமே 100 கடைகளைத் திறந்திருப்பது நமது லட்சியத்திற்கு கிடைத்த வெற்றி. இந்திய அளவில் ஒரே நகரத்தில் 100 கடைகளை அமைத்தது மிகச்சில நிறுவனங்கள் மட்டுமே சாதித்த ஒன்றாகும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என்றார்


நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் பிரகாஷ் கூறியதாவது:
“நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தரத்திற்கு தான் முதல் முன்னுரிமை. உயர்தரப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது முதல் அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியான தரத்தை பராமரிப்பது வரை கவனமாகச் செயல்படுகிறோம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய சுவைகள், தாராளமான அளவு மற்றும் விதவிதமான காம்போக்களை வழங்கி வருகிறோம். 200-வது கிளையைக் கொண்டாடும் இந்த வேளையிலும் தரம், புதுமை மற்றும் சிறந்த சேவையையே இலக்காகக் கொண்டு இயங்குகிறோம்.”

இந்திய மக்களின் இனிப்பு சாப்பிடும் பழக்கம் தற்போது பெருமளவில் மாறியுள்ளது. முன்பு எப்போதாவது ஒருமுறை சாப்பிட்ட ஐஸ்கிரீம், இன்று இரவு உணவுக்குப் பிறகு குடும்பத்தோடு சென்று சாப்பிடும் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. மக்களின் இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்ட போலார் பேர் நிறுவனம், அதற்கேற்ப புதிய வகை சண்டேக்களையும், அமர்ந்து சாப்பிடுவதற்கான சிறந்த சூழலையும் அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சிக்கு பிராஞ்சைசி (Franchise) முறையே முக்கியக் காரணம். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கடைகள் நீண்டகால பிராஞ்சைசி கூட்டாளர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் போலார் பேர் நிறுவனம் வலுவாகக் காலூன்றியுள்ளது.இந்த மைல்கல்லை எட்டியுள்ள போலார் பேர் நிறுவனம், அடுத்த கட்டமாக ஏற்கனவே இருக்கும் சந்தைகளை பலப்படுத்துவதோடு, இந்தியளவில் மேலும் பல புதிய நகரங்களுக்கும் தனது கிளையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம்
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
மாடம்பாக்கம் நாடார் சங்கத்தில் ஏழாம் ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தெங்கம்புதூர் அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

February 17, 2026
46 Views
குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை; போதை ஆசாமி வெறிச்செயல்
கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account