கோவை, அக். 15:
பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் உள்ள கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது.
இதில் முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் அபு. இக்பால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கலாமின் வாழ்க்கை வரலாறு, அறிவியல் சாதனைகள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, கலாமின் கொள்கைகளைப் பின்பற்றுவோம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் ஆர்.வி.எஸ். மாரிமுத்து, செயலாளர் எஸ்.டி. ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



