திருப்பத்தூர், ஜூன் 29 –
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஊர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. ஜெயச்சந்திரன், பத்மநாபன், சாந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. ஊர் கவுண்டராக விருப்பம் தெரிவித்த பிரேம் ஆனந்த் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஊர் பொதுமக்கள், கோவில் குழுவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர் கவுண்டர் ஆறு ஆண்டுகளுக்கு பொறுப்பினை வகிப்பார்.



