[8:44 am, 8/7/2024] +91 77083 36991: மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் நோக்குடன், மக்களுக்கும் அரசிற்கும் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற “நீங்கள் நலமா” என்ற புதியதொரு திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின்
கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்
. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி
நிலையங்களில் இண்டஸ்ட்ரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்பிரிவுகளில் (Advanced CNC Machining Technician) மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து ரங்கம்பாளையம் தொழிற்நுட்ப கல்லூரியில் பயின்று வரும் மாணவன் ரவிகிருஷ்ணாவின் தந்தையாக முருகனி டம் “நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் முதலமைச்சர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்.
முருகன் அவர்கள் தெரிவித்ததாவது
நான் ஈரோடு மாவட்டம், பெரியசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். என் மனைவி பெயர் அஞ்சலாதேவி, எனக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் ரங்கம்பாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வருகின்றனர். எனது மகனுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூ.750 விலையில்லா சைக்கிள், சீருடை, சீருடை தைப்பதற்கான கூலி, பாட புத்தகங்கள்,
காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
முதலமைச்சர்
[8:44 am, 8/7/2024] +91 77083 36991: .
என்னை தொலைபேசி மூலமாக நேரடியாக தொடர்பு கொண்டு, எனது மகன் (ரவிகிருஷ்ணா) எவ்வாறு பயின்று வருகிறான் எனவும், கல்லூரியில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, சீருடை போன்ற அனைத்து நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படுகின்றதா எனவும் கேட்டறிந்தார். முதலமைச்சர் எங்களை போன்ற ஏழை, எளிய மக்களுடன் நேரடியாக தொலைபேசியில் பேசியதை நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. எங்கள் மீது அக்கறை கொண்டு எங்கள் மகனின் படிப்பை பற்றி தொலைபேசியில் கேட்டறிந்த முதலமைச்சருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை கொள்கிறோம் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.



