தருமபுரி தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அதக பாடியில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ 1.78 லட்சம் அரசு மானியத்தில் லட்சம் மதிப்பிலான நிழல் வலைக்கூடத்தில் வெண்டைக்காய் கத்திரிக்காய் நாற்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு விவசாயி வடிவேலுடன் கலந்து ரையாடினார். அளே தருமபுரி ஊராட்சியில் மூங்கில் மகளிர் சுய உதவி குழுவின் மூலம் மதிப்பு கூட்டு பொருட்களாக புளி தயாரித்தல் பணியை ஆட்சியர் பார்வை விட்டு சுய உதவி குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து சின்னபுதூரில் கால்வாய் துர்வாரும் பணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , நலவாழ்வு மையத்தை ஆட்சியர் நேரில் கள ஆய்வு செய்தார் .பின்னர் செம்மண்டகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரேஷன் கடை எஸ். கொட்டாவூரில் எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. செம்மண்ட குப்பம் ஊராட்சியில் தாட்கோ சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு தல 5.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 12 வீடுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார் .பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, குழந்தைகளிடம் உரையாடினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திமா, ஆர்டிஓ காயத்ரி, தாசில்தார் சண்முகசுந்தரம், பிடிஓ சத்யா மற்றும் மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



