By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை

Last updated: October 30, 2025 5:12 pm
October 30, 2025
42 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோர் 30 –

நாகர்கோவில் மாநகராட்சியில் சில பகுதிகளில் தெருக்கள் சாலையோரங்களில் ஆடு, மாடு, பன்றிகள் திறந்தவெளியில் வெட்டப்பட்டு வருவதாக புகார்கள் இருந்து வருகின்றன. மேலும் சிறிய கன்றுகள் விபத்தில் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்து போன, ஆடு, மாடுகளையும் விற்பனை செய்து வருவதாகவும் சுகாதாரமற்ற முறையில் கடைகள் உள்ளதாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

இதனை எடுத்து நேற்று, மேயர் மகேஷ் தலைமையில், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில், மாநகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு இறைச்சி கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வகை இறைச்சி கடைகளும் மாநகராட்சியில் அனுமதி பெற்று கடைகள் நடத்த வேண்டும். நோய்வாய்ப்பட்ட மற்றும் விபத்தில் இறந்த ஆடு, மாடுகளை வெட்டி விற்பனை செய்யக்கூடாது. கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், பெரு நகரங்கள் போல் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் ஆடு, மாடுகளை வெட்ட வதைக்கூடம் அமைக்கவும், முதல் கட்டமாக ஏற்கனவே ஆடு அடிக்கும் கூடம் செயல்பட்டு வந்து தற்போது மூடி கிடக்கும் வடக்கு மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணன் கோவில், மற்றும் கிழக்கு மண்டலத்தில் உள்ள இளங்கடையில் உள்ள ஆடு, மாடு அடிக்கும் கூடங்களை நவீன முறையில் சீரமைத்து நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. காலை மற்றும் மாலையில் 4 மணி முதல் 8 மணி வரை இங்கு கால்நடை மருத்துவர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேயர் மகேஷ் கூறுகையில், (இன்று 30ம் தேதி) முதல் மாநகராட்சி ஆடு மற்றும் மாட்டு இறைச்சி கடை உரிமையாளர்கள் இந்த வதைக்கூடங்களில் மட்டுமே ஆடு மாடுகளை வெட்டி சீல் வைத்து விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். தவறினால் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து அனைத்து இறைச்சி கடைகளுக்கும், மாநகராட்சி மாநகர் நலத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் நேரில் சென்று கூடங்களில் வெட்டி மாநகராட்சி சீல் வைத்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். தவறினால் சீல் இல்லாத இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் பின்னரும் தொடர்ந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர் நல அலுவலர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

எஸ்டிபிஐ கட்சி 16 ம் ஆண்டு துவக்க தின

June 22, 2024
67 Views
அதிமுக மீட்பு குழு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மேகமலையில் மரம் சாய்ந்தது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
நிதியுதவி வழங்கிய கலெக்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account