நாகர்கோவில், அக். 6:
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீட்டு உள் அலங்கார நிறுவனமான ஹோம் லேன், நாகர்கோவில் செட்டிக்குளத்தில் தனது முதல் அனுபவ மையத்தைத் தொடங்கியுள்ளது. 700 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், நவீன சமையலறைகள், சேமிப்பகங்கள் மற்றும் முழுமையான வீட்டு உள் அலங்காரத் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டிற்கான உள் அலங்கார வடிவமைப்பை பணிகள் தொடங்குவதற்கு முன்பே முப்பரிமாணக் காட்சியாகப் பார்த்து அறியும் வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பயன்படுத்தப்பட உள்ள பொருட்களின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்வதுடன், வடிவமைப்பு, வசதிகள் மற்றும் அதற்கான செலவு உள்ளிட்ட விவரங்களை தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையிலும் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டு உள் அலங்காரத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வடிவமைப்புகளை உருவாக்கும் வகையில் ஹோம் லேன் செயல்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய அனுபவ மையம் மூலம், வீட்டு உள் அலங்காரத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் தீர்வுகளை நேரடியாக பார்வையிட்டு தங்களுக்கு ஏற்றவற்றை தேர்வு செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இந்த புதிய அனுபவ மையத்தின் திறப்பு விழா நடைபெற்றபோது, ஹோம் லேனின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி தானுஜ் சௌத்ரி ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிறுவன நிர்வாகிகள், வர்த்தகக் கூட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



