தென்காசி, ஆக. 22 –
தென்காசியில் ஸ்ரீ பெரியசாமி மற்றும் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது காலை பால்குடம் எடுத்தல் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் இசக்கிமுத்து மற்றும் டாக்டர் சீதாராமன் கலந்து கொண்டு ஸ்ரீ பெரியசாமி மற்றும் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை மாவட்ட செயலாளர்கள் இசக்கிமுத்து மற்றும் சீதாராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாலை நாதஸ்வர இசை நிகழ்ச்சி, பூந்தட்டு ஊர்வலம், பொங்கலிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மாநில துணைத் தலைவர் சேது அரிகரன், மாவட்ட துணை தலைவர் மகாதேவன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் முருகன், தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, குற்றாலம் ராம்குமார், அச்சன்புதூர் பேரூர் கழக செயலாளர் மைதீன்பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர்.



