தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைகட்டும். குறிப்பாக வீட்டிலேயே தயாரிக்கும் இனிப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. இந்த தீபாவளிக்கு குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாகச் செய்யக்கூடிய இரண்டு வித்தியாசமான இனிப்பு வகைகளைப் பார்க்கலாம்.
1. பீனட் ஃபட்ஜ் (Peanut Fudge)

தேவையான பொருட்கள்:
- வறுத்த வேர்க்கடலை – 1 கப்
- வெல்லம் – ½ கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
- உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சவும். பின்னர் நெய், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனுடன் அரைத்த வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியாகத் தொடங்கியதும் நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பவும். ஆறியதும் சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.
2. சாக்லேட் பிஸ்கட் ஃபட்ஜ் (Chocolate Biscuit Fudge)

தேவையான பொருட்கள்:
- மேரி பிஸ்கட் – 15
- டார்க் சாக்லேட் – 150 கிராம்
- கன்டென்ஸ்டு மில்க் – ½ கப்
- வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய முந்திரி – ¼ கப்
- கோகோ பவுடர் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் பிஸ்கட்டுகளைச் சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சாக்லேட், வெண்ணெய் சேர்த்து டபுள் பாய்லிங் முறையில் உருக்கவும். அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பின்னர் உடைத்த பிஸ்கட் துண்டுகள், முந்திரி சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை பட்டர் பேப்பர் விரித்த தட்டில் கொட்டி சமமாகப் பரப்பவும். 2 முதல் 3 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துச் சிறிய துண்டுகளாக வெட்டவும். சுவையான சாக்லேட் பிஸ்கட் ஃபட்ஜ் தயார்!
குறிப்பு: இந்த இரண்டு இனிப்புகளையும் முன்கூட்டியே தயாரித்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம். சாக்லேட் ஃபட்ஜை ஃபிரிட்ஜில் வைத்துப் பரிமாறுவது சிறந்தது.



