ராமநாதபுரம், ஜுன் 30 –
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு தரவை ஊராட்சி அம்மன் கோவில் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
திறப்பு விழாவில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம. கருமாணிக்கம், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொறுப்பாளர் நகர்மன்ற உறுப்பினர் இராஜாராம் பாண்டியன், வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அம்மன் கோயில் கிராமத்தில் தொடக்க பள்ளி புதிய கட்டடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. எம்எல்ஏக்கள் செங்கல் எடுத்து கொடுத்து பணியை துவக்கி வைத்தனர்.