திருவள்ளூர் அக் : 15 ,
திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மழை நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



