திருவண்ணாமலை, ஜூலை 25 –
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் இயக்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய வேண்டி திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையிலுள்ள அரப்ஷா வலியுல்லாஹ் தர்காவில் இயற்கை விவசாயிகள் இயக்க மாநில பொதுச்செயலாளரும் தளபதி தொண்டனுமான தானிப்பாடி எஸ்.ஆர். ஜாகீர்ஷா தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி சென்றபோது தலைச்சுற்றல் ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் ஏதும் பெரிய அளவில் பிரச்சனை ஏதுமில்லை எனவும் 2 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய வேண்டி திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையிலுள்ள அரப்ஷா வலியுல்லாஹ் தர்காவில் தளபதி தொண்டன் தானிப்பாடி எஸ்.ஆர். ஜாகீர்ஷா தலைமையில் ஜெ. ஹமிதா எஸ்.ஆர். ஆஜாத் மற்றும் இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டு பிரார்த்தனையில் அவரது குடும்பத்தினரும், ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் இயற்கை விவசாயிகள் கலந்துகொண்டு பாடல்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.