By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரிதான எபிஓ – இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அரிதான எபிஓ – இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
மதுரைமாவட்டம்

அரிதான எபிஓ – இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

Last updated: January 9, 2025 12:50 pm
January 9, 2025
49 Views
Share
SHARE

மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவ துறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக மிகவும் அரிதான எபிஓ – இணக்கமற்ற (ABO-Incompatible) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தனித்துவமான மருத்துவ சேவையில் தன்னுடைய தலைமைத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. தென்தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையைக் கொண்டு சேர்ப்பதில் அப்போலோ மருத்துவமனை என்றும் முன்னிலை வகிப்பதையும் இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது. மதுரையை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க ஆண் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை அப்போலோ  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர பரிசோதனைக்கு பிறகு அவரின் உடல்நிலையை கருதி அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழு பரிந்துரைத்தது. ‘O’ இரத்த பிரிவை உடைய அந்த நபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நீண்ட ஆலோசனைக்கு பிறகு எபிஓ – இணக்கமற்ற (ABO-Incompatible) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. பொருந்தாத மாற்று இரத்த பிரிவை கொண்ட நபரிடம் இருந்து சிறுநீரகத்தை பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் முறை தான் இந்த எபிஓ – இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. பொதுவாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு குடும்பத்தினரில் உள்ள இணக்கமான இரத்த பிரிவை கொண்ட நபரிடம் இருந்தோ அல்லது மூளை சாவு அடைந்த நபரிடம் இருந்து உறுப்பு தானம் பெற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். சில நேரங்களில் இது போன்ற வாய்ப்புகள் அமையாத பட்சத்தில் மிகவும் அரிதான எபிஓ – இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். அதன்படி சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட ஆணின் (‘O’ Blood Group) 37 வயதான ‘B’ இரத்த பிரிவு கொண்ட அவரது  மனைவியின் சிறுநீரகத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் வெற்றியைக் குறித்து மதுரை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பி. அருண் பிரசாத் கூறியதாவது, “ABO-இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மிகுந்த சிக்கலான சிகிச்சையாகும், இதில் துல்லியமான திட்டமிடலும் பிரத்யேகமான மருத்துவ செயல்பாடுகளும் தேவைப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபர் சிறுநீரக மாற்றத்திற்கு முன் இம்முனோசப்ரெஸ்ஸன்ட் எனப்படும் நோயெதிர்ப்பு சக்தியின் அமைப்பை குறைத்து ஆன்டிபாடி நீக்கம் என்கிற பிளாஸ்மாபெரிசிஸ் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளுடன் கூடிய ஒரு சிறப்பு சிகிச்சை முறையை எதிர்கொண்டார். இதனை தொடர்ந்து டிசம்பர் 18 ஆம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது. அறுவை சிகிச்சைக்கு பின் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபரும் நன்கொடையாளருமான அவரது மனைவியும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு டிசம்பர் 26 ஆம் தேதி இருவரும் நலமுடன் வீடு திரும்பினார். செய்தியாளர்கள் சந்திப்பில் பி. நீலகண்ணன் அப்போலோ மருத்துவமனையின் மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி, டாக்டர் கே. பிரவீன் ராஜன், சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. அருண் பிரசாத் ஆகியோருடன் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜே. அருண் குமார், டாக்டர் கே. சங்கர், டாக்டர். அழகப்பன், மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி. ஸ்ரீதர், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் அப்துல் காதர், டாக்டர். சுப்பையா, தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் சி.ஐயப்பன், இரத்த வங்கி நோயியல் நிபுணர் டாக்டர் எம். இந்து, மார்க்கெட்டிங் பொது மேலாளர் கே. மணிகண்டன், நிர்வாக துணை பொது மேலாளர் லாவண்யா மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் பூமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டையபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
திருவட்டாரில் வீடு விழுந்து பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
குமரி மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய பெய்த கோடை மழை
தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை பொது கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

மருத்துவ மனையின் 54வது பட்டமளிப்பு விழா

August 5, 2024
91 Views
முதல் முதலில் தண்ணீர் முறை சுகப்பிரசவம்!!
அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை
விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்
பாஜக சார்பில் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account