திருப்பூர், ஜூன் 20 –
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. என்னை திருப்பூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கடந்து வாரம் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
இனி வரும் நாட்களில் இது போன்று நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகள் மற்றும் வசதிகளை செய்து தர அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். நேர்மையான வெளிப்படையான மக்கள் நலம் சார்ந்த அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் K.G.அருண்ராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், மாவட்ட வருவாய் அலுவலர்
க.கார்த்திகேயன், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) க.சங்கமித்திரை, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஈஸ்வரன், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



