திருப்பூர், ஆக. 27 –
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை வழிபட்டு 10 ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்த பின்னர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்: திருப்பூரில் 5000இடங்களிலும் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் வீடுகளில் சிறிய விநாயகர் வைத்து வழிபாடு நடைபெறுகிறது.
இந்த அரசு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை குலைக்க வேண்டும், விநாயகர் சிலை அமைக்க கூடாது என செயல்பட்டு வருகிறது. அதிக சிலை வைத்து விட்டால் அந்த பகுதி காவல் அதிகாரிக்கு தண்டனை என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அரசு அராஜகமான மோசமான அசுர அரசாக உள்ளது. விநாயகர் மீது கை வைத்து பல அதிகாரிகள் அழித்துள்ளனர். முதல்வர் நீண்ட காலம் இருக்க வேண்டும் என இந்து முன்னணி வேண்டிக் கொள்கிறது. அடுத்த 5 நாட்கள் ஊர்வலம் உள்ளது. இதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் இல்லை எனில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். இது போன்ற நடவடிக்கைகள் தமிழக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விநாயகர் சதுர்த்தி மூலம் பல வணிக நிகழ்வுகள் நடைபெறுகிறது.



