திருச்சி, மே 7 –
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்து சென்ற முத்துலட்சுமி (24) என்பவரை மேலூரைச் சேர்ந்த நாகரத்தினம் (40) என்பவர் வழிமறித்து, அவரது ஜாதியைக் குறிப்பிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸார் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நாகரத்தினத்தை கைது செய்தனர்.


