திண்டுக்கல், அக். 14:
திண்டுக்கல்லில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல் ரவுண்ட்ரோடு புதூர், ரயில்வே காலனியைச் சேர்ந்த அஜித் சுரேந்தர் (26) என்பவர், கடந்த காலத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்ததாக நகர் வடக்கு காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் பிணை பெற்று வெளியே வந்த அவர், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அஜித் சுரேந்தருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதன் அடிப்படையில், நகர் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தலைமறைவாக இருந்த அஜித் சுரேந்தரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இதன் மூலம் நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டது.



