திருப்பூர், ஜூன் 05 –
விஜய்க்கு பிறகு எல்லோருக்கும் முதல்வன் படம் போல் சி.எம் ஆசை வந்து விட்டது. அண்ணாமலை முறைகேடுகள் குறித்து சிபிஐ, ஈடி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்கள் மாயையை நோக்கி செல்லக் கூடாது. இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கோபிநாத் பேட்டி.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல்வேறு இடர்பாடு மிக்க சூழலில் சுயநலமின்றி களமிறங்கி சேவையாற்றும் அமைப்பு. அரசியலில் சேவையாற்ற பாஜக உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட தேசிய கட்சியில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றை கடந்து தான் பயணிக்க வேண்டும். ஐ.பி.எஸ் பணியை முறையாக செய்ய வில்லை எப்படி அரசியலில் பணியாற்றுவார் என 3 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருந்தேன் அதுதான் இன்று நடைபெற்றது. கர்நாடகாவில் இவர் பணியாற்றிய போது யாருக்கும் இவரை தெரியாது. ஆனால் இவரின் படிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல சீனியர்கள் இருந்தும் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.
குறைகளை நிவர்த்தி செய்யவே மாநில தலைவர் பதவி தரப்பட்டது. டெல்லியில் சென்று குறைசொல்ல கிடையாது. கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அதை தவிர்த்து இறந்த தலைவர் குறித்து பேசியதே அதிமுக உடன் பிரச்சினை எழுந்தது. தற்போது பதவி இல்லாததால் பாஜக கட்சி குறித்து குறை சொல்வது ஏற்புடையது அல்ல. சோசியல் மீடியா இல்லாத போது தெருத்தெருவாக அலைந்து பலர் கட்சியை வளர்த்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வர சிவராஜ் சவுகான் தான் காரணம் அவர் கட்சிக்கு பணிந்து தேசிய அரசியலுக்கு சென்றார். பாஜகவில் உள்ள அனைவரும் கொள்கை சார்ந்த சகிப்புத்தன்மை உள்ள தலைவர்கள் மேலிடம் சொல்வதையே கேட்பார்கள். சுயநலத்திற்காக அண்ணாமலை பாஜகவை விட்டு பிரிந்து கட்சி துவங்குகிறார். பல முறைகேடுகள் செய்துள்ளார்.
மத்திய அரசு அவர் மீது ஈடி சோதனை செய்து சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும். மாநில உளவுத்துறையும் கண்காணிக்க வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறிய உடன் பாஜகவிற்கு எதிராக பேசுகிறார். விஜய்க்கு பிறகு எல்லோருக்கும் முதல்வன் படம் போல் சி.எம் ஆக ஆசை வந்து விட்டது. விஜய் கூட கஷ்டப்பட்டு தான் வந்துள்ளார். இளைஞர்கள் தொலைநோக்காக சிந்திக்க வேண்டும். கொள்கையை சொல்லி அரசியல் செய்ய வேண்டும் பாஜகவில் இருந்து யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது. எத்தனை பேர் வந்தாலும் போனாலும் சாதாரண காற்று ஆலமரத்தை அசைக்காது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை உள்ளிருந்து சரி செயய் வேண்டும் அதை விடுத்து குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு செல்லக்கூடாது. அண்ணாமலை வேண்டுமானால் பிறர் பின் நின்று இயக்குவார். அவர் பின் யாரும் இல்லை. ஆடு மேய்த்தவர் ஐபிஎஸ் ஆனது சந்தோஷம். ஆனால் இப்போது இருக்கும் சொத்து எங்கிருந்து வந்தது. 1 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் அதற்காக தான் இந்த செய்தியாளர் சந்திப்பு. மாயையை நோக்கி தமிழகம், இளைஞர்கள் செல்லக்கூடாது. என தெரிவித்தார்.



