By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 21, 2026 2:18 pm
July 21, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 21 –

தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்கவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி, பச்சமுத்து மற்றும் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் ஆகியோரின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் நஞ்சப்பன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுப்பிரமணியம், மண்டல செயலாளர் ராஜ்குமார் மற்றும் மண்டல துணைச் செயலாளர் ராஜசேகரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், குடிநீர் தேவையையும் கடுமையாக பாதிக்கும் எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்திற்கு உரிய நீர் உரிமையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் இந்திய ஜனநாயக கட்சி ஒருபோதும் ஏற்காது என்றும், மேகதாது அணை திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஆர்பாட்டத்தின் போது “மேகதாது அனைத்திட்டத்தை கைவிடு”, ” தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாத்திடு”, “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்று” உள்ளிட்ட கோஷங்கள் முழங்கப்பட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருணாகரன் தருமபுரி சட்டமன்றம், முனிரத்தினம் பாலகோடு சட்டமன்றம், பெருமாள் பென்னாகரம் சட்டமன்றம், ராஜீவ் காந்தி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றம் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் செறியூட்டப்பட்ட உணவு தொடர்பான விழிப்புணர்வு
100% நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் மாயம்
அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்

June 30, 2025
69 Views
புத்தக கண்காட்சி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை
பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்
வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்
பளுகல் அருகே போதைப்பொருள் விற்ற வாலிபர்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account