கோவை, ஜூலை 04 –
கோவை மாவட்டம் சூலூர் அண்ணா கலையரங்கில் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் சிங்கை சௌந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சரின் மண், மொழி, மானம் என்ற ஓரணியில் தமிழ்நாடு என்ற ஆணைப்படி திமுகவினர் ஒவ்வொருவரும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமையை பொதுமக்கள் பயன்பெற்று வரும் நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
திமுகவில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்கவும் மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் திமுக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பாஜக அரசு கண்டித்தும் பொதுக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மன்னவன், சி.பி. செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ரகு, துரைராஜ், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், நகரச் செயலாளர் கவுதமன், பேரூராட்சி தலைவர்கள் சூலூர் தேவி மன்னவன், கண்ணம்பாளையம் புஷ்ப லதா ராஜகோபால், இலக்கிய அணி பட்டணம் செல்வகுமார், மாணவரணி பிரபு, சுற்றுச்சூழல் அணி பசுமைநிழல் விஜயகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் உட்பட தொண்டர்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



