தருமபுரி, ஜூன் 05 –
தருமபுரி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இலக்கியம்பட்டி, தடங்கம், கடகத்தூர் ஆகிய ஊராட்சிகளில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசந்தி, சாலை வசதி, 100 நாள் வேலை திட்டம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தனர். உடனடியாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக ஊராட்சி செயலாளர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



