கோவை, ஜூன் 22 –
கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 500 நபர்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தையல் இயந்திரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பிற்படுத்த பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சாய்பாபா காலனி பகுதி கழக செயலாளர் காலனி முஸ்தபா விழாவை ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் பாலாஜி, ஷேக் அப்துல்லா, தமிழரசி டேனியல், பாபு, தருண், அலெக்ஸ், ஹேமந்த், மயில் வாகனம், அபுதாகிர், தமிழ் இலக்கிய பானு, ஜீவானந்தம், ஶ்ரீ சத்தியா, பட்டுராஜா விஜய், குமார், சுதா, சந்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



