தஞ்சாவூர், மார்ச் 19 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர்மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொதுதேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம் போட்டிகள் நடந்தது.
இப்போட்டியை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதி களுக்கான செலவினை பார்வையாளர் ஹேமங் பூகன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த விழிப்புணர்வு ரங்கோலி போட்டியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்டம் உதவி கலெக்டர் சவுமியா, துணை கலெக்டர் (பயிற்சி) கமலேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



