தஞ்சாவூர், ஏப்ரல் 25 –
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டசபையை தொகுதிகளிலும் 80.60 சதவீதம் வாக்களித்தனர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மாவட்டத்தில் உள்ள திருவிடை மருதூர் (தனி) கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி 8 தொகுதிகள் உள்ளன. இதில் திருவிடைமருதூர் தொகுதியில் 1,26,222 ஆண்கள், 1,30,700 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,56,930 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 98,884 ஆண்கள், 1,08,178 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என 2,07,065 வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்கு பதிவு விகிதம் 80.59 சதவீதம்.
கும்பகோணம் தொகுதியில் 1,23,507 ஆண்கள், 1,30,796 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,54,318 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 98,505 ஆண்கள் 1,07,575 பெண்கள் 10 மூன்றாம் பாலினத்தவர் என 2,06,090 பேர் வாக்களித்தனர். வாக்குப் பதிவு விகிதம் 81.04 சதவீதம்.
பாபநாசம் தொகுதியில் 1,24,740 ஆண்கள், 1,31,755 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,56,518 பேர் உள்ளனர். இவர்களில் 96,901 ஆண்கள், 1,09,187 பெண்கள், 9 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,06,097 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 80.34 சதவீதம்.
திருவையாறு தொகுதியில் 1,26,231 ஆண்கள், 1,32,123 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,58,374 பேர் உள்ளனர். இவர்களில் 1,06,921 ஆண்கள், 1,13,170 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,20,099 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு விகிதம் 85.19 சதவீதம்.
தஞ்சாவூர் தொகுதியில் 1,20,317 ஆண்கள், 1,32,309 பெண்கள், 50 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,52,676 பேர் உள்ளனர். இவர்களில் 92,142 ஆண்கள், 1,03,558 பெண்கள், 37 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,95,737 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 77.47 சதவீதம்.
ஒரத்தநாடு தொகுதியில் 1,13,315 ஆண்கள், 1,20,221 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,33,542 பேர் உள்ளனர். இவர்களில் 88,228 ஆண்கள், 1,05,551 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,93,782 பேர் வாக்களித்தனர். வாக்குபதிவு விகிதம் 82.98 சதவீதம்.
பட்டுக்கோட்டை தொகுதியில் 1,16,032 ஆண்கள், 1,26,368 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,42,420 பேர் உள்ளனர். இவர்களில் 80,272 ஆண்கள், 1,02,545 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,82,825 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு விகிதம் 75.42%.
பேராவூரணி தொகுதியில் 1,04,786 ஆண்கள், 1,09,145 பெண்கள், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,13,946 பேர் உள்ளனர். இவர்களில் 80,869 ஆண்கள், 94,317 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தார் என மொத்தம் 1,75,192 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு விகிதம் 81.89 சதவீதம்.
மாவட்டத்தில் 9,55,150 ஆண்கள், 10,33417 பெண்கள், 157 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 19,68,722 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,42,722 ஆண்கள் 8,44,081 பெண்கள் என மொத்தம் 15,86,887 வாக்களித்தனர். அதாவது ஆண்கள் 77.76 சதவீதம் பேரும், பெண்கள் 83.29 சதவீத பேரும் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் வாக்குப்பதிவு விகிதம் 80.60 சதவீதமாகும்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறு தொகுதியில் 85.19 சதவீதமும் குறைந்தபட்சமாக பட்டுக்கோட்டை தொகுதியில் 75.42 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.



