தஞ்சாவூர், ஏப்ரல் 22 –
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை யொட்டி வருகிற 27ம் தேதி திங்கட்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு 27ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக அடுத்த மாதம் மே 9ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



