சேலம், ஜூன் 11 –
சேலம் மாவட்டத்தில் 19.06.2026 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகின்ற 19ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். சேலம் கோரி மேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர் மற்றும் தொழில் கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் . முகாம் தொடர்பான விவரங்களுக்கு jobairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 0427- 2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்ய உள்ள தொழில் நிறுவனங்களும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.


