கன்னியாகுமரி, அக் : 13
எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்கள் மற்றும் வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, சுசீந்திரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் குடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் முத்து நாடான் தலைமை தாங்கினார். சமூக சேவகர்கள் மயிலை பார்த்தசாரதி, சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மயிலாடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் மயிலை எஸ். மாணிக்கம் மாணவர்களுக்குக் குடைகளை வழங்கினார்.
மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்குப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.



