சேலம், செப்டம்பர் 10:
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், சின்ன சீரகப்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும், அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைப்பதை உறுதி செய்யவும் இத்தகைய முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முகாம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், முகாம் நாளில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.
இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.54.06 லட்சம் மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ.34.96 லட்சம் மதிப்பிலும் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பிலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
மகளிர் திட்டத்தின் சார்பில் 5 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.58 லட்சம் கடன் உதவி உள்ளிட்ட மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 49 லட்சத்து 72 ஆயிரத்து 180 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவர் தெரிவித்தார்.
முன்னதாக, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Short Heading:



