By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை ராயல் கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் ICU
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை ராயல் கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் ICU
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை ராயல் கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் ICU

Last updated: October 6, 2026 3:06 pm
October 6, 2026
13 Views
Share
SHARE

கோவை, அக். 6:

கோவை ராயல் கேர் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 14 படுக்கைகள் கொண்ட இந்த புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் தொடர்பான அவசர மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா ராயல் கேர் மருத்துவமனையில் நடைபெற்றது.

புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் திறந்து வைத்தார். ராயல் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி. சம்பத் குமார், தமிழகத்தில் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைக்கான ஆண்டு நிதி வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல்வேறு தரப்பினரும் உயர்தர மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையில் முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் உயிரைக் காக்கும் அவசர மற்றும் உயர் சிகிச்சை வழங்கப்படுவது மிகவும் அவசியம் என்றும், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர உயர் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருவதால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை மருத்துவத் துறையில் உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் ராயல் கேர் மருத்துவமனை தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவது பெருமைக்குரியது என்றும் அமைச்சர் வி. சம்பத் குமார் தெரிவித்தார். நோயாளிகளுக்கு நவீன மருத்துவ வசதிகளை ஒரே இடத்தில் வழங்குவதற்கான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து ராயல் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் பேசுகையில், நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்டு மருத்துவத் துறையில் உலக அளவில் பயன்படுத்தப்படும் முன்னணி தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, தீவிர நரம்பியல் பாதிப்புகளுக்கு விரைவான மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வழங்கும் வகையில் புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

புதிய பிரிவின் சிறப்பம்சங்கள் குறித்து நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் சிவக்குமார் விளக்கமளித்தார். 14 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரிவில் நரம்பியல் தொடர்பான தீவிர பாதிப்புகளுக்கு தேவையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வசதிகள், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நரம்பியல் தொடர்பான அவசர நிலைகள், தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உள்ளிட்டோருக்கு ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை வழங்கும் வகையில் இந்த புதிய பிரிவு செயல்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த பிரிவு மூலம் நோயாளிகளுக்கு விரைவான மருத்துவ மதிப்பீடு, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தேவையான தீவிர சிகிச்சைகளை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த தொடக்க விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம். சுகுமார், மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி, சி.ஓ.ஓ. மணி செந்தில் குமார், மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவு சீனியர் பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சேர்ந்தமரம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டி புத்தகங்களை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
திருவெண்ணெய்நல்லூரில் என் வாக்கு என் உரிமை 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எதிர்காலம் பிரகாசிக்கும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
தோவாளையில் பண மோசடி வழக்கில் கைதுக்கு சென்ற எஸ்ஐ மீது நாயை ஏவி கடிக்க வைத்த கணவன் மனைவி: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

6வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக

January 8, 2025
56 Views
தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account