சென்னை, செப். 26:
ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறை கண்காட்சியான டச்சஸ் உத்சவ் 2026-ன் 25வது பதிப்பு வெள்ளி விழாவாக சென்னையில் தொடங்கியது. இதில் திரைப்பட நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான அனிதா ரத்னம் உள்ளிட்ட டச்சஸ் சமூக உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.
கடந்த 25 ஆண்டுகளில் பெண்கள் தொழில்முனைவு, படைப்பாற்றல், வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறனை முன்னிறுத்தும் முக்கிய தளமாக டச்சஸ் உத்சவ் வளர்ந்துள்ளதாக அதன் இணை நிறுவனர்களான நினா ரெட்டி, அனுராதா சச்தேவா, ரதி நீலகண்டன், அனு அகர்வால் மற்றும் சுஜாதா முண்ட்ரா தெரிவித்தனர். இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னெடுக்கும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.



